Login

Lost your password?
Don't have an account? Sign Up

NAMAKKAL | கிரீன் பார்க் பள்ளி தலைவர் சரவணனிடம் விடிய விடிய விசாரணை ரூ.50 கோடி சிக்கியது | #News360

Contact us to Add Your Business

#3 வது நாளாக தொடரும் விசாரணை
#Namakkal #Green Park School #Saravanan #MD #News360

#50 மணி நேர சோதனைக்கு பிறகு  பல கோடி ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது இரவு
தொடர்ந்த சோதனை காலை முதலே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன 
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் கடந்த சில நாட்களாக
வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை,
பெருந்துறை, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களை
குறிவைத்து இந்த ரெய்டு நடந்தது. இதில் நீட் நுழைவு தேர்வுக்காக மாணவர்களிடம்
பெறப்படும் தொகை, எம்.பி.பி.எஸ் சீட்டிற்காக பெறப்படும் தொகை ஆகியவற்றை
முறையான பதிவேடு இல்லாமல் பெற்று வரி ஏய்ப்பு செய்துள்ளதை அதிகாரிகள்
கண்டுபிடித்தனர். நாமக்கல் கிரீன்பார்க் என்ற கல்வி மையத்தில் மட்டும் நேற்று நடந்த
சோதனையில்  30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய வருமான வரி துறை 
அறிக்கை வெளியிட்டுள்ளது 
தமிழகம் முழுவதும் மொத்தம் 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மையத்தில் நேற்று முன்தினம் மட்டும்  50 
கோடி ரூபாய்  சிக்கியதாக  கூறப்பட்ட நிவையில் 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு
நடந்திருப்பதாக தெரிகிறது . இங்கு 2   நாளாக  தற்போது இரவு வரை  50 மணி 
நேரமாக  தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும்  50 கோடிக்கு மேல் பணம் கிக்கியதாக தெரிகிறது இந்த
சோதனை இன்று 3 நாளாக காலை முதலே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன நேற்று
முன்தினம் பள்ளி வரவு செலவு தொடரூமாக வங்கியில் சோதனை செய்ய பட்டது நேற்று
வங்கி விடுமுறை என்பதால் சிக்கிய தொகை இன்னும் தொகை 50 கோடிக்கு மேல்
இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது இதற்கிடையே இந்த சோதனை நாளை இரவு வரை
நீடிக்கும் எனவும் வங்கி நாளை திறக்கப்பட்டால் பள்ளி பங்குதாரர்களிடம் விசாரணை
நடத்த பட்டு மேலும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள்
கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது 

இந்த நிலையில் கிரீன் பார்க் பள்ளி தலைவர் சரவணனிடம் விடிய விடிய விசாரணை
நடைபெற்றது அவரது வீட்டில் ஆவணங்கள் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது பள்ளி வீடு
என காரில் சுற்றி சுற்றி விசாரணை செய்ய படுகிறது

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

10 comments

  1. Lora rajkumar

    50 ரூவா டீயூசன் பீஸீக்கு ஏங்கீ தவிச்ச பயலுங்கsktg டியூசன் பத்தி நாமக்கல்ல கேட்டூபாரூங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*