Login

Lost your password?
Don't have an account? Sign Up

வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது, மரம் தான் பாக்கி; மரம் வளருங்கள்! – வீட்டுக்கொரு மரம்!

Contact us to Add Your Business

வீட்டுக்கொரு மரம்!
————-

வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி;
மரம் வளருங்கள்!

காட்டில் வளர்ந்ததை அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்;
எனவே இனி வீட்டில் வளருங்கள்!

வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்கள்!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!

பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள்
எனவே மரம் வளருங்கள்!
வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான்.
இது அகிம்சை நாடு
எனவே மரம் வளருங்கள்!

வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீர்கள்
அவர்கள் காட்டில் மழை பெய்கிறது!
நீங்கள் காய்ந்து போனீர்கள்!

அவர்களுக்கு வாங்கும் கரங்கள்!
மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்!

அவர்கள் வெயிலைத் தருவார்கள்;
மரங்கள் நிழலைக் கொடுப்பவை;
எனவே இனியாவது மரங்களை வளருங்கள்!

அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வளர்ப்பார்கள்;
உங்களுக்கு மரம்தான்; எனவே மரம் வளருங்கள்!

என்றாவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால்
தடிகள் செய்யலாம்!
அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்கள்!!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

15 comments

  1. Sri Raman R

    நாம் தமிழர்…… “””பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்”””……

  2. Fluffy candyfloss 🍭

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் வரவேண்டும்
    அழகான பதிவு ஆழமான வரிகள் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
    இயற்கை இறைவன் கொடுத்த வரம் அதை காக்க வேண்டுகிறோம் எல்லாம் அவன் செயல் சிந்தித்து செயலாற்ருங்கள் சொந்தங்களே 👍🏽👍🏽👍🏽

  3. அன்பழகன்

    நீர் வருக அண்ணா இந்த விவசாயத்தை மீட்டெடுப்போம் அப்படியே ஒரு இருவது வருஷத்துக்கு பின்னாடி போய் வாழ்ந்தால் வாழ்ந்தால் நல்லா இருக்கும் தாத்தா பாட்டி காட்டில் நாங்கள் அப்படி விளையாடுவோம் இன்று எதுவுமே இல்லை எல்லாம் மூட்டை கட்டிட்டாங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*