Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.namakkaldistrict.com

26 comments

  1. TRG CREATIONS

    கண்டிப்பாக இந்த விடியோ பார்த்த பிறகு நான் எனது குடும்பத்தில் அனைவரும் உணவு முறைகளை பின்பற்றுவேன்.

  2. Sundara Moorthy

    நம் பாரம்பரியம் சார்ந்த உணவு பற்றிய தெளிவான விளக்கமும் அவற்றை இன்று பின்பற்ற தவறியதின் விளைவையும் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி 🙏

  3. angel david

    வேகமாக ஓடிக்கோண்டு இருக்கும் மனிதன் சற்று நிதானமாக ஆரோக்கியத்தைப் பற்றி யோசித்தால் நன்றாகி விடுவான்.

  4. Jayan Thi

    இரண்டாயிரத்து இருபதின் இறுதியில் உலக அளவில் தற்சார்புப் புரட்சி வெடிக்கும் . அதன் தாக்கத்தில் கார்ப்பரேட்கள் ஆட்டம் சிதறும் . நிழல் அரசாங்கம் நடுநடுங்கும் . உலக சமுதாயம் மலரும் .

  5. துரை ராஜலிங்கம்

    வணக்கம் நண்பர்களே,
    *”தற்சார்பு வாழ்க்கை”, “தற்சார்பு பொருளாதாரம்”, “இயற்கை வாழ்வியல்”, “இயற்கை விவசாயம்”, “இயற்கை விளைபொருட்கள்”, “இயற்கை அங்காடி” (Organic Store), “நாட்டு மாட்டு பால்” (A2 Milk)* போன்ற சொற்கள் தற்பொழுது பெரும் பேசும் பொருளாகி உள்ளது, மக்கள் இதை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

    மேற்சொன்ன எவையும் நமக்கு புதிய விடயங்கள் அல்ல, *அருபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அன்றாடம் கடைபிடித்து நமக்கு விட்டு சென்றவையே. நாம் இவைகளை என்றோ துளைத்துவிட்டு இன்று இதன் அருமையை உணர்ந்து, புரிந்து கொண்டு அனைவரும் இவ்விடயங்களை அடைய பின்நோக்கி செல்வது நற்செயலே.*

    கடந்த நான்கு மாதங்களில் *கொரோனா நமக்கு நிறைய படிப்பினைகள் தந்துள்ளன.*
    1.) நாடு தற்பொழுது சீன பொருட்கள் வேண்டாம், உள்நாட்டு உற்பத்தியே சிறந்தது என்று *தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி* அடி எடுத்து வைக்கிறது.
    2.) மக்கள் பலர் பெரு நகரங்களை துறந்து தங்களது சொந்த கிராமத்திற்கு *தற்சார்பு வாழ்க்கையை* நோக்கி செல்கின்றனர்.
    3.) *விவசாய நிலங்களின் மதிப்பு சற்று கூடியுள்ளது. இளைஞர்கள் பலர் விவசாயத்தை கையில் எடுக்கின்றனர். “இயற்கை விவசாயம் பெருகி வருகிறது”.*

    தற்பொழுது, பெரும்பான்மையான மக்கள் நஞ்ஞில்லா உணவு வேண்டும், *இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள்* வேண்டும், *பாரம்பரிய அரிசி வகைகள்* வேண்டும், நாட்டு மாட்டு பால் வேண்டும், மரச்செக்கு எண்ணை வேண்டும் என்று விரும்புவதும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகச் சரியே.

    ஆனால், *மருந்து மற்றும் மருத்துவம் மாத்திரம் வெளியில் இருந்து வந்த இங்கிலிஷ் மருந்து, அலோபதி மருத்துவம் வேண்டும். இதற்கும் மேல், தடுப்பூசி வேண்டும் என்று வேறு அலைகிறார்கள், என்ன ஒரு வேடிக்கை.*

    பக்க விளைவுகள் (Side Effects) அற்ற மருந்து, தடுப்பூசி என்று எதுவும் இல்லை. நவீன மருத்துவம் நோயின் அறிகுறிகளை சரி செய்யும் ஆனால் நோயை அல்ல. பொதுவாக *தடுப்பூசி தேவையற்றது, அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம்* என்றும், குறிப்பாக *கொரோனாவிற்கு தடுப்பூசி இவ்வளவு குறுகிய காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மிகப் பெரிய ஆபத்து என்று தடுப்பூசி மற்றும் கிருமி ஆராய்ச்சியாளர்களே திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.*

    ஒரு சாதாரண தொற்று நோய்க்கு பல பல மருந்துகளை, தடுப்பூசிகளை கவர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே இருப்பார்கள். மருந்து மற்றும் தடுப்பூசி என்பது இன்று பண்ணாட்டு வியாபார அரசியல். இதில் மக்கள் நலன் பெரிதாக ஏதும் இல்லை. *அனைத்து ஆங்கில மருந்து, தடுப்பூசிகள் பல இரசாயன கலவையில் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுவது. பக்க விளைவுகள், எதிர் விளைவுகள் உடனடியாக தெரியாமல் இருக்கலாம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாதிப்புகளுக்கு வாய்ப்புன்டு* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    கொரோனாவிற்கு எதிரான மிகச் சிறந்த, அற்புதமான மருந்து ஒன்று இருக்கிறது. அது, *நம் உடலில் இயற்கையாகவே உள்ள “நோய் எதிர்ப்பு ஆற்றல்”.* இதை விட சிறந்த மருந்து உலகில் வேறேதும் இல்லை. _பலர், மருந்தை தங்களுக்குள் வைத்து கொண்டு, ஏன் வெளியில் தேடுகிறார்கள் என்பது வியப்பே._ நோய் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் “நோய் எதிர்ப்புச் சக்தியை” பலப்படுத்துவது. _”கொரோனா மட்டும் அல்ல, எவ்வித நோயிலிருந்தும் நம்மை எளிமையாக காத்துக் கொள்ளலாம்”._

    *நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இன்னும் பல, சித்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதில், நோயை குணப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது* என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
    நாம், *நமது மண்ணில் தோன்றிய, நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாரம்பரிய சித்த மருத்துவத்தை பின்பற்றுவதே சாலச்சிறந்தது.*

    நவீன மருத்துவத்திற்கும் (அலோபதி) தனி சிறப்புண்டு, எங்கெங்கு அவசியம் தேவையோ அங்கு மட்டும் பயன்படுத்துவது நன்று. அவசரகால சிகிச்சை, விபத்து போன்றவைக்கு மிகவும் ஏற்றது.

    *”இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கைதான், இத்தருணத்தில் அனைவருக்கும் தேவை.*

    *உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வல்லமை பெற்றது,* என்பதை உணர வேண்டும். *இயற்கையான நம் உடலுக்கு இயற்கையான நமது பாரம்பரிய “தற்சார்பு மருத்துவமே” சாலச்சிறந்தது.*

    *_”உணவே மருந்து; மருந்தே உணவு”_* எனும் தமிழர்களின் வாழ்வியல் நெறியை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம். நன்றி.

    1. துரை ராஜலிங்கம்

      @V. T Maaran வணக்கம் மாறன் வேல், தங்கள் பதிவிற்கு நன்றி.
      நான் மருத்துவர் அல்ல.
      என்னுடைய பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததா.

    1. rajesh kannan

      உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக…. மிக மிகவும் அருமையானதாக உள்ளது … நமது நாட்டில் பலரது
      உடலில் பல நோய்கள் உள்ளது
      அனைத்திற்கும் உணவு சார்ந்த
      ஆரோக்கியமான பதிவுகள் தருகிறீர்கள்… நாங்கள் என்றும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*