Login

Lost your password?
Don't have an account? Sign Up

இலையும் கல்லும்! – பகுதி 2 | நாளும் பல நற்செய்திகள் | இறையன்பு

Contact us to Add Your Business

இலையும், கல்லும்!

ஓர் இலையும், ஒரு கல்லும் நதிக்கரையில் கிடந்தன.

இலையைப் பார்த்து கல் சொன்னது, எனக்கு ஒரு ஆசை. நான் இந்த நதி கடலில் விழுகிற இடம்வரை, அதில் நீந்தி பயணம் செய்ய வேண்டும். அதன் அசைவுகளெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலை சொன்னது, அது உன்னால் முடியாது. விழுந்த மாத்திரத்தில் நீ மூழ்கிப்போவாய். ஏன்? நீ அடர்த்தியாய், கனமாய் இருக்கிறாய். உன் கனத்தினால் இத்தனை நாள் பெருமைப்பட்டாய். கனத்தினால் உன் மீது மோதியவர்களுக்கெல்லாம் காயம்பட்டது. நீ கர்வப்பட்டாய். கனமிருப்பது நீந்த முடியாது.

அப்போது, அந்த வழியாக வந்தவன் காலால் எத்தியதில் இலையும், கல்லும் நதியில் விழுந்தன. கல் அடுத்த நொடியே நதியின் அடியே சென்று அமர்ந்தது. இலை நதியினூடே அழகாக மிதந்து சென்றது. அந்த சுகமான பயணத்தில் திளைத்தது. பூமியின் சகல பரிமாணங்களையும் அது உணர்ந்து கொண்டது.

பலர் கல்போல் இருக்கிறார்கள். பெருமை என நினைக்கிறார்கள். அவர்கள் தலை கனத்திருப்பதால் மூழ்கிப்போய் வாழ்வின் அடித்தளத்திலேயே தங்கிவிடுகிறார்கள். கல் கனமாய் இருப்பதால் பிடிவாதமாய் இருக்கிறது. பிடிவாதத்துடன், அடமாய் இருப்பவர்களால் வளர முடிவதில்லை. வளர்ச்சிக்கு எதிராய் தங்களை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள்.

சருகு போல் மென்மையாய் இருப்பவர்கள்தான் நதியின் ஓட்டத்திற்குத் தன்னை ஒப்படைக்க முடியும். சருகு நதியோடு சண்டை போடுவதில்லை. அதனால்தான் அது மிதக்க முடிகிறது. கல் திடமாக இருந்து நதியிடம் தோற்றுப்போகிறது. சருகு மென்மையாக இருந்து நதியிடம் கை குலுக்குகிறது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

14 comments

  1. Murugan Sivasubramaniam Vamathevan (MSV)

    இனிய காலை வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.

  2. Fluffy candyfloss 🍭

    அன்பான இனிய காலை வணக்கம் அண்ணா அழகான பதிவு ஆழமான கருத்து எல்லாரும் நலமா எப்போதும் நலமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் காலமதை நம்புங்கள் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 🥰🥰🥰🥰🥰❤️❤️🥰🥰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  3. Karthikeyan T

    நாம்தமிழர் உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் எனக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் வாழ்ந்த இடத்தின் ஒரு பிடி கை மண் எனக்கு வேண்டும்.தயவு செய்து யாராவுது உதவமுடியுமா.நான் சென்னையில் உள்ளேன்.கண்டிப்பாக நம் ஈழத்தமிழ் மக்களுக்கு இறைவன் அருளால் எதாவது ஒரு நண்மை ஏற்படும்.நானும் அப்பணியில் ஈடுபடுவேன்.எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை இதில் விவரிக்க விரும்பவில்லை. ஒவ்வொரின் நல்ல முயற்சியும் ஒரு நண்மையை தரும். உதவுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*